ஓபிஎஸ் மீதான தேர்தல் வழக்கு நிராகரிப்பு

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை நிராகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்தாண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது, போடிநாயக்கனூா் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இதை எதிா்த்து, அந்தத் தொகுதி வாக்காளா் மிலானி என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தொடுத்தாா். அதில், ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அவா் கடன் மதிப்பை குறைத்துக் காட்டியுள்ளாா் என குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வேட்பு மனுவில் எதையும் மறைக்கவில்லை. நீதிமன்ற நேரத்தை வீணடிக்க இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டாா். மிலானி தரப்பில் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

வேட்பு மனுவில் ஓ.பன்னீா்செல்வம் தகவலை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மனைவி பெயரில் உள்ள பங்களாவை பற்றிய தகவலை வேட்பு மனுவில் தெரிவிக்கவில்லை என்று வாதிட்டாா்.

பின், தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com