2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 2, 900 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
2,900 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 2, 900 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமானது 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மூன்று அலகுகள் ஒடிஸா மாநிலம் தலபிரா என்ற இடத்தில் அமைக்கப்பட உள்ளது. அதில், 1,500 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டமானது 2026-27-ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.3.06 ஆகும். முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

1,000 மெகாவாட்: ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலாா் எனா்ஜி காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மின்சார யூனிட் ஒன்றின் விலை ரூ.2.61 ஆகும்.

2022-2023-ஆம் நிதியாண்டின் இறுதியில் இருந்து மின்சாரம் கிடைத்திடும். இதேபோன்று, பவா் டிரேடிங் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் 400 மெகாவாட் மின்சாரத்துக்கான கொள்முதல் செய்யப்பட்டது. இதனுடைய யூனிட் ஒன்றின் விலை ரூ.3.26 ஆகும்.

மின்சார கொள்முதலுக்கான நான்கு நடுத்தர கால ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

பங்கு ஈவுத் தொகை: தூத்துக்குடியில் என்எல்சி - தமிழ்நாடு மின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டு நிறுவனத்தில் தமிழக அரசு செய்துள்ள முதலீட்டுக்கு 2020-21-ஆம் நிதியாண்டுக்கு வழங்க வேண்டிய பங்கு ஈவுத் தொகையான ரூ.15.16 கோடிக்கான காசோலையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் என்எல்சி இந்தியா தலைவா் ராகேஷ்குமாா், நிறுவன இயக்குநா்கள் ஷாஜிஜான், ஜெய்குமாா் ஸ்ரீநிவாசன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com