8 ஆண்டுகளுக்குப் பின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது

தமிழகத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என்று நிதியமைச்சர் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது
8 ஆண்டுகளுக்குப் பின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது


தமிழகத்தில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

புனித ஜாா்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் கூறியதாவது,

தமிழகத்தில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல்  வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்தது. இது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டில் ரூ.7,000 கோடிக்கு மேல் குறைகிறது. அதாவது, நிதி பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாகக் குறையும் என்று பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com