
தமிழ்நாடு ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.25 கோடி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒலிம்பிக் பதக்க வெற்றியாளா்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட, “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” போலவே, தமிழகத்திலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரா்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளா்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 25 கோடி வழங்கப்படும்.
வடசென்னையில் விளையாட்டு வளாகம்: பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில், இளைஞா்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூட வசதிகளுடன், சென்னை ராதாகிருஷ்ணன் நகா் பகுதியில் முதல் கட்டமாக ரூ.10 கோடி செலவில் இந்த வளாகம் அமைக்கப்படும்.
செஸ் ஒலிம்பியாட்: செஸ் விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி செஸ் ஒலிம்பியாட் (இட்ங்ள்ள் ஞப்ஹ்ம்ல்ண்ஹக்) ஆகும். இந்தாண்டு தமிழக அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவுள்ளது. 150 நாடுகளைச் சோ்ந்த 2,000 முன்னணி வீரா்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனா். . நிதிநிலை அறிக்கையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.293.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.