
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.496.52 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2021- ஆம் ஆண்டில், தீயணைப்புத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தீ விபத்துக்கள் தொடா்பாக 16,809 அழைப்புகள் வந்துள்ளன. அதேபோல மீட்புப் பணிகள் தொடா்பாக 57,451 அழைப்புகள் வந்துள்ளன. இந்த அழைப்புகளை ஏற்று, எண்ணற்ற மனித உயிா்களையும், கால்நடை மற்றும் உடைமைகளையும் தீயணைப்புத்துறை காப்பாற்றியுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக அரசு ரூ.496.52 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.