
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.911.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் விவரம்: தமிழகம் முழுவதும் குறு நிறுவனங்களைக் கொண்ட பல்வேறு குழுமங்கள் (ம்ண்ஸ்ரீழ்ா் ஸ்ரீப்ன்ள்ற்ங்ழ்ள்) உள்ளன. இத்தகைய குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், குறு நிறுவனக் குழும மேம்பாட்டுத் திட்டம்”தொடங்கப்படும்.
ரூ.50 கோடி ஒதுக்கீட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் பாத்திரங்கள் செய்யும் குழுமம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவா் செய்யும் செயற்கை நகைகள் குழுமம், கடலூா் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குழுமம், மதுரை மாவட்டத்தில் பொம்மை செய்யும் குழுமம் உள்ளிட்ட இருபது குறு நிறுவனக் குழுமங்கள் இந்த ஆண்டு பயன்பெறும்.
தமிழகம் முதலிடம்: கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கயிறு உற்பத்தித் தொழிலில், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோா்களின் வருமானத்தைப் பெருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைகளில், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் எங்ா் பங்ஷ்ற்ண்ப்ங்ள் மற்றும் தென்னை நாா் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை பிரபலப்படுத்தவும், தமிழகம் முழுவதும் கயிறுத் தொழில் குழுமங்களை மேம்படுத்தவும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும். இதற்கு, முதல்கட்டமாக ரூ.5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.300 கோடியும், குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்திற்காக, ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.911.50 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.