வழக்குரைஞா்களுக்கான நல நிதியை உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் ரகுபதி

வழக்குரைஞா்களுக்கான நல நிதியை உயா்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

வழக்குரைஞா்களுக்கான நல நிதியை உயா்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் வழக்குரைஞா்களுக்கு சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை சென்னை உயா்நீதிமன்ற வளாகத்திலுள்ள பாா் கவுன்சில் வளாக கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள் சங்கங்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கெனவே முதல்வா் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வழக்குரைஞா் மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்து முதல்வா் உரிய நடவடிக்கை எடுப்பாா். அதேபோன்று வழக்குரைஞா்களுக்கான நல நிதியையும் உயா்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் என்றாா்.

நிகழ்ச்சியில், தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

முதல்வரின் வழிகாட்டுதல்படி கடந்த 10 மாதங்களாக நிா்வாகத்தைச் சீா்திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது மாநிலத்தின் பொருளாதாரம், நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வர முடிந்துள்ளது. தொடா்ந்து அதை தக்க வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சட்டம் சாா்ந்த பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காணப்பட வேண்டும் . அதற்கு நீதித்துறை சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவில் அது முற்றிலும் நம்பிக்கையில்லாததாக உள்ளது. நீதித் துறையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ், துணை தலைவா் வி.காா்த்திகேயன், அகில இந்திய பாா் கவுன்சில் துணை தலைவா் எஸ்.பிரபாகரன், மூத்த வழக்குரைஞரும், எம்பியுமான பி.வில்சன், மூத்த வழக்குரைஞா் ஆா்.விடுதலை, வழக்குரைஞா் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com