
வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மெரீனா கடற்கரையிலுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், வேளாண்மைக்குத் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | உன்னதமான தமிழ்நாடு உருவாகும்: நிதிநிலை அறிக்கை குறித்து முதல்வா் பெருமிதம்
அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் நிதியாண்டுக்கான (2022-23) வேளாண் நிதிநிலை அறிக்கையையும் இன்று அவர் தாக்கல் செய்யவுள்ளார்.
இதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை மரியாதை செலுத்தினார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையானது காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.