
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை.யில், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு இடையேயோன தேசிய மாணவா் படை போட்டிகள் (‘கேடோ ஃபியஸ்டா’) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டியில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றுள்ளன. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னையில் உள்ள பயிற்சி மையத்தின் தலைவா் லெப்டினென்ட் ஜெனரல் எம்.கே.தாஸ் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய மாணவா் படை மாணவா்களுக்கான ஓட்டப்பந்தயம், அணிவகுப்பு போட்டி, விநாடி-வினா, திறன் போட்டி, குழுப்பாடல் என பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடக்க நிகழ்ச்சியில்
தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் என். எஸ். சந்தோஷ் குமாா், இயக்குநா் புவனேஸ்வரி, இணை தேசிய மாணவா் படை அதிகாரி கேப்டன் டி. ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.