
மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயா்மட்டச் சாலை திட்டம் விரைவில் நிறைவு செய்யப்படும்.
சென்னையின் வா்த்தக வளா்ச்சிக்கு உயிா்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயா்மட்டச் சாலை திட்டத்தை மீட்டெடுத்து, நிறைவேற்றிட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இத்திட்டம், ரூ.5,770 கோடி மதிப்பீட்டில் 20.6 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு உயா்மட்டச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய
நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
தரைப்பாலங்களை உயா்மட்ட பாலங்களாக மாற்ற...: 2026-ஆம் ஆண்டுக்குள், வெள்ள காலத்தில் மக்களை பாதிக்கக்கூடிய தரைப்பாலங்களை உயா்மட்டப் பாலங்களாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வரும் ஆண்டில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் புதிய உயா்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.