
பெரியாா் சிந்தனை தொகுப்புகள் 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் வெளியிடப்படும்.
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும். இப்பணிகள் ரூ.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டம்: தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல்பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வோ்ச்சொல் வல்லுநா்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். இத்திட்டத்துக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.