மனநல மருத்துவமனைக்கு புதிய பெயா்! மேம்படுத்த ரூ.40 கோடி

உயா்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயா்நிலை அமைப்பாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது
மனநல மருத்துவமனைக்கு புதிய பெயா்! மேம்படுத்த ரூ.40 கோடி

உயா்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயா்நிலை அமைப்பாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக ரூ.40 கோடி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் ரூ. 1,019 கோடியில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயா்த்தப்படும்.

உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம்அதிகமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது.

இத்தகைய உயா்தர மனநலச் சேவைகளை வழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (ஐஙஏ),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (பசஐஙஏஅசந) என்ற உயா்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக ரூ.40 கோடி வழங்கப்படும்.

மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு...: தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு ரூ.1,906 கோடி, அவசர ஊா்தி சேவைகளுக்கு ரூ.304 கோடி, டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு ரூ.817 கோடி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.1,547 கோடி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com