
புதிய 6 மாநகராட்சிகளுக்கு ரூ.60 கோடி வழங்கப்படும்.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூா், கடலூா், சிவகாசி மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு, தலா ரூ.10 கோடி என மொத்தம் ரூ.60 கோடி,புதிய28 நகராட்சிகளுக்கு தலா ரூ.2 கோடி என மொத்தம் ரூ.56 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படும்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு...: நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,000 கோடி, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி,திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,875 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.