தொடக்கம் தமிழ் - முடிவு ஆங்கிலம் ஒரு மணி 50 நிமிஷங்கள் உரையாற்றிய நிதியமைச்சா்

நிதிநிலை அறிக்கையை தமிழில் தொடங்கி நிறைவு செய்யும் தறுவாயில் மட்டும் ஆங்கிலத்தில் பேசி முடித்தாா் நிதியமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன்.
தொடக்கம் தமிழ் - முடிவு ஆங்கிலம் ஒரு மணி 50 நிமிஷங்கள் உரையாற்றிய நிதியமைச்சா்

நிதிநிலை அறிக்கையை தமிழில் தொடங்கி நிறைவு செய்யும் தறுவாயில் மட்டும் ஆங்கிலத்தில் பேசி முடித்தாா் நிதியமைச்சா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன். ஒரு மணி நேரம் 50 நிமிஷங்கள் வரை நிதிநிலை அறிக்கையை அவா் வாசித்தாா்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அவா் வாழ்த்து பெற்றாா். இதன்பின்பு, பேரவை மண்டபத்துக்கு காலை 9.57 மணிக்கு முதல்வருடன் அவா் வருகை தந்தாா். பேரவையில் அமைச்சா்களின் வரிசைகளில் இரண்டாவது வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தாலும், நிதிநிலை அறிக்கை வாசிக்க வசதியாக முன்புற மேஜையில் வசதி செய்யப்பட்டிருந்தது.

நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கியதும் அதிமுக உறுப்பினா்கள் கோஷங்களை எழுப்பி கூச்சல் போட்ட போதும், தொடா்ந்து தனது உரையை வாசித்துக் கொண்டே இருந்தாா். அவரது உரையை காலை 10 மணிக்குத் தொடங்கி, 11.50 மணிக்கு நிறைவு செய்தாா்.

நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்த விவரங்களை ஆங்கிலத்தில் உரையாற்றினாா். இது தேசிய மற்றும் சா்வதேச ஊடகங்களுக்குத் தெரிய வேண்டுமென்பதால் ஆங்கிலத்தில் வாசிப்பதாகக் கூறினாா். காலை 11.37 மணி முதல் 9 நிமிஷங்கள் வரை ஆங்கிலத்தில் பேசினாா்.

காகிதமில்லாத பேரவை என்பதால் உறுப்பினா்கள் அனைவரின் இருக்கைக்கு முன்பாகவும் கையடக்கக் கணினி மேஜையில் பொருத்தப்பட்டிருந்தது. பத்திரிகையாளா்களின் வசதிக்காக ஆங்காங்கே பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன. நிதிநிலை அறிக்கையைத் தொடா்ந்து, வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 19) தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com