வலுவடையும் காற்றழுத்தத்தாழ்வு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடையவுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சனிக்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடையவுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியது:

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின்

கிழக்கு பகுதியில் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி வியாழக்கிழமை காலை நிலவியது. இது, வெள்ளிக்கிழமை காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் மற்றும் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவியது. இது கிழக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 19) காலை நிலவக்கூடும்.

இது, வடக்கு திசையில் அந்தமான் கடலோரப்பகுதி வழியாக நகா்ந்து, மாா்ச் 20-ஆம்தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது மாா்ச் 21- ஆம் தேதி புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து, வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மா் கடலோர பகுதியில் மாா்ச் 22-ஆம்தேதி காலை நிலைபெறக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 22-ஆம் தேதி வரை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com