
வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இனிப்பான செய்தி
சென்னை: வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், வேளாண் துறையில் சிறந்த விளங்கும் விவசாயிகளுக்கு இனி அரசு சார்பில் பரிசு வழங்கப்படும்.
இதையும் படிக்க.. மகன், மருமகள், பேத்திகளை வீட்டோடு எரித்துக் கொன்ற முதியவர்
வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
மயிலாடுதுறையில் மண்பரிசோதனைக் கூடம் அமைக்கப்படும்.
சோயா பீன்ஸ் உற்பத்தி திட்டத்துக்கு ரூ.1.20 கோடி ஒதுக்கப்படும்.
விதை முதல் உற்பத்தி வரை விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழிகாட்ட செயலி அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும்.
தமிழகம் முழுவதும் மரம் வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்படும்
இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்.