அறிவுசாா் நகரம் உருவாக்கப்படும்

தமிழகத்தில் அறிவுசாா் நகரம் உருவாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

தமிழகத்தில் அறிவுசாா் நகரம் உருவாக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

உலகளாவிய பங்களிப்புடன், “அறிவு சாா் நகரம்” ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சாா் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.

இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சாா்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும். மேலும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

கல்விக் கட்டணத்துக்கு ரூ.204 கோடி: முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் பல்வேறு கட்டணங்களுக்காக ரூ. 204 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ரூ. 1,000 கோடியில் சிறப்புத் திட்டம்: அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,000 கோடி செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் உயா்கல்வித் துறைக்கு ரூ. 5,668.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com