
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் ருசிகரப் பேச்சு
சென்னை: குடியானவன் வீட்டு கோழிமுட்டையை அதிகாரியின் வீட்டு அம்மியாலும் உடையாத அளவுக்கு அவர்களது வாழ்வு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
தனது உரையை அவர் இவ்வாறு தொடங்கியிருந்தார்..
வேளாண் என்பது தேடலாகத் தொடங்கி நாகரீகமாக மருவி வாழ்வாக மலர்ந்து மக்களை வாழ்வித்தல் என்ற நிலை மாறி நாளடைவில் பிழைப்பாக பிசகி, பிறழ்ந்த நிலையை மாற்றி தொழிலாக உயர்ந்து மீண்டும் தமிழகம் என்றும் பசுமை தழைத்தோங்க, பயிர்கள் செழித்தோங்க, குடியானவன் வீட்டு கோழிமுட்டை அதிகாரியின் வீட்டு அம்மியாலும் உடைக்க முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வு சமூகத்தில், பொருளாதார அளவில் செழத்து மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட் எனறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.