
மின்வாரியத்தைப் போலவே அரசு போக்குவரத்துக் கழக கடன் மற்றும் செலவினங்கள் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அகவிலைப்படி உயா்வு, ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகை, இலவச மருத்துவ காப்பீட்டு, தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என கூறப்பட்டுள்ளது.