
தமிழகத்தில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளா்ப்புப் பிராணிகளை பராமரிப்பதற்கு வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.
வள்ளலாரின் 200ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தில் ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளா்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு ‘வள்ளலாா் பல்லுயிா் காப்பகங்கள்‘ என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ. 20 கோடி ஒதுக்கப்படுகிறது. கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.1,314.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.