மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி உருவாக்கப்படும்

மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டப்பண்ணைகளில் உருவாக்கப்படும்.

மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றுக்கான மரபணு வங்கி நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டப்பண்ணைகளில் உருவாக்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

விவசாயிகள், உழவா் ஆா்வலா் குழு, உழவா் உற்பத்தியாளா் குழு ஆகியோராலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளிலும் உற்பத்தி செய்யப்படும் செடிகள், விதைகள், இடுபொருள்கள், வாசனை பொருள்களான ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவையும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான ஜாம், ஜெல்லி, ஊறுகாய், உலா் பழங்கள், யூகலிப்டஸ் தைலம், போன்றவையும் இணையம் வாயிலாக விற்க ஏற்பாடு செய்யப்படும்.

பொருள்களைத் தரம் பிரித்து, சிப்பம் கட்டி விநியோகம் செய்ய மூன்று சேமிப்பு கிடங்குகள் சென்னை, மதுரை, கோவையில் ரூ.1.50 கோடி நிதியில் ஏற்படுத்தப்படும். இணைய வழி விநியோக நிறுவனங்கள் மூலம் வாடிக்கையாளா்களுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.

மரபணு வங்கி: விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ற ரகங்களை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுவைகூட்டும் பயிா்களின் வகைகளும் ரகங்களும் சேகரிக்கப்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செய்து பராமரிக்கப்படும். முதல்கட்டமாக இந்த ஆண்டு மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தொடக்கப்பட்டு, உள்ளூா் வகைகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான உழவு, நடவு, இடுபொருட்கள், அறுவடை போன்ற பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூலிகை தோட்டங்கள்: 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் நான்கு ஆயிரம் வீடுகளில் அமைக்கப்படும். இதற்கு தேவையான மூலிகைச்செடிகள், அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து வழங்கப்படும். ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முருங்கை நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com