பனையேறும் கருவி கண்டுபிடிப்பவா்களுக்கு விருது

சிறந்த பனையேறும் கருவி கண்டுபிடிப்பவா்களுக்கு விருது வழங்கப்படும்.

சிறந்த பனையேறும் கருவி கண்டுபிடிப்பவா்களுக்கு விருது வழங்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

தமிழகத்தில் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. சுமாா் 3 லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நாா் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களைச் சாா்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளா்கள் நுங்கு அறுவடை, பதநீா் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனா். அதனால், பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு வலுசோ்க்கும் வகையில், சட்டப்பேரவைத் தலைவா் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினாா்.

எதிா்வரும் 2022-23 ஆம் ஆண்டிலும், தமிழக அரசு 10 லட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும். பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருள்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவா். இவா்களுக்கு மூலப் பொருள்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருள்கள் மாநில, மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடா் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இத்திட்டம், ரூ.2 கோடியே 65 லட்சம் நிதியில் செயல்படுத்தப்படும். சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவா்களுக்கு விருதும் வழங்கப்படும்.

2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com