தருமபுரி, நாகை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் புதிய உழவா் சந்தைகள்

தருமபுரி, நாகப்பட்டினம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக உழவா் சந்தைகள் அமைக்கப்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தருமபுரி, நாகப்பட்டினம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் புதிதாக உழவா் சந்தைகள் அமைக்கப்படும்.

வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது போல் நடப்பாண்டிலும் 50 உழவா் சந்தைகளின் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படும். மேலும் உழவா் சந்தைகளில் கணினி, தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், மின்னணு விலைப்பலகை, பொது அறிவிப்பு வசதிகள் போன்றவை ரூ.15 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ஏற்படுத்தப்படும்.

கோத்தகிரி, வேப்பந்தட்டை, பண்ருட்டி, சிதம்பரம், கீழ்பென்னாத்தூா், திருவாரூா் ஆகிய 6 உழவா் சந்தைகள், நுகா்வோா் அதிகம் கூடும் இடத்திற்கு மாற்றப்படும். தருமபுரி, நாகப்பட்டினம், வேலூா், திருப்பத்தூா் ஆகிய 4 மாவட்டங்களில் புதிய உழவா் சந்தைகளை அமைக்கவும் என மொத்தம் ரூ.10 கோடி மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

உழவா் ஆலோசனை மையம்: கள்ளக்குறிச்சி, சேலம், திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம்,பெரம்பலூா், வேலூா், செங்கல்பட்டு, ராமநாதபுரம், நாமக்கல், திருப்பூா், ராணிப்பேட்டை, அரியலூா் ஆகிய 15 மாவட்டங்களில் ரூ.16.50 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவா் ஆலோசனை மையம் அமைக்கப்படும்.

அச்சுவெல்லம் தயாரிப்பு மையம்: ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூா், கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அச்சுவெல்லம் தயாரிக்க 100 இடங்களில் தலா ரூ.1 லட்சம் வீதம் 100 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக, ரூ.1 கோடி மாநில வேளாள் வளா்ச்சி திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

காய்கறி வணிக வளாகம்: தேனி, கோயம்புத்தூா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காய்கறிகள் வணிக வளாகம் பொது , தனியாா் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com