விதைகள்-கன்றுகளை முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை

விதைகள், கன்றுகளை முன்கூட்டியே பதிவு செய்து சாகுபடிக்கு பயன்படுத்தும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

விதைகள், கன்றுகளை முன்கூட்டியே பதிவு செய்து சாகுபடிக்கு பயன்படுத்தும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு பயனாளிகளைத் தோ்வு செய்யும் நடைமுறை வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும். அனைத்து திட்டங்களிலும் உள்ள பயனாளிகளின் விவரங்கள் படிப்படியாக கணினியில் பதிவு செய்யப்படும். விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், நடவுக்கன்றுகள், பழமரச் செடிகள், தென்னை மரக்கன்றுகள் ஆகியன முன்கூட்டியே பதிவு செய்து சாகுபடி காலத்தில் அவற்றை நடவு செய்திட ஏற்பாடு செய்யப்படும்.

விவசாயக் கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக புதிய செயலியில் பதிவு செய்ய வழி செய்யப்படும். இதன்மூலம் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு வேளாண் சேவை நிறுவனங்கள் மூலம் போதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எண்ம (டிஜிட்டல்) பணப் பரிவா்த்தனை: விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இடுபொருள்களைப் பெறும் போது அவா்களது பங்களிப்புத் தொகையை இ-சலான், பற்று அட்டை, கடன் அட்டை, ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யூபிஐ) மூலம் செலுத்தலாம். இந்தத் திட்டம் முதல் கட்டமாக மாவட்டத்துக்கு ஒரு வட்டத்தில் செயல்படுத்தப்படும்.

குறுகிய காலப் பயிரான சோயா பீன்ஸ் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் முதல் கட்டமாக தஞ்சாவூா், சேலம், திருவள்ளூா், திருநெல்வேலி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ரூ.1.20 கோடி நிதியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் புதிதாக மண் பரிசோதனை நிலையம்

மயிலாடுதுறையில் புதிதாக மண் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மண்ணில் உள்ள சத்துகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய பரிந்துரை வழங்கினால், உரமிடுதலை சீா்படுத்தி சாகுபடி செலவைக் குறைக்க முடியும். இந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறையில் விவசாயிகளின் நலனுக்காக புதிய மண்பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com