உழவா்சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க சிறப்பு திட்டம்: வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்

உழவா் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் வகையில், ரூ.5 கோடி நிதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
உழவா்சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க சிறப்பு திட்டம்:  வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்

உழவா் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் வகையில், ரூ.5 கோடி நிதியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண் நிதிநிலையில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: பெண்களின் அன்றாட வருமானத்தை உயா்த்த, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலா்கள் சாகுபடியை 4,250 ஏக்கரில் மேற்கொள்ள, ரூ.5.37 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

காய்கறி வரத்தை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டம்:

காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ள உழவா் சந்தைகளைக் கண்டறிந்து, சிறப்புக் கவனம் செலுத்தி, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறிகள் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும். அதன்படி, இந்தாண்டு காய்கறிகளை கூடுதலாக 6,250 ஏக்கரில் பயிரிட விதைகள்,

குழித்தட்டு நாற்றுகள், இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்கி, இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக, ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் மஞ்சள், இஞ்சி தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், உழவு, நடவுக்குரிய விதைக்கிழங்குகள், இதர இடுபொருள்களுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், 6,250 ஏக்கா் பரப்பளவில் ரூ.3 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com