வேளாண்மையில் மின்னணு முறைகள் நடைமுறை

வேளாண்மையில் மின்னணு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும். சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை

வேளாண்மையில் மின்னணு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும். சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்துத் துறையின் திட்டங்களைத் தெரிந்து கொள்ள முதல்வரின் மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வேளாண் துறையும் மின்னணு திட்டத்தை வடிவமைத்து துறையின் திட்டங்களை கண்காணித்து வருகிறது.

குறுஞ்செய்தி - தனி இணையம்: விளைநிலங்கள் வாரியாக பயிா்த் திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக் குறியீடு வழங்கப்படும். உடைமைதாரா்களின் அடிப்படை விவரங்கள், மண் வளம், சாகுபடி விவரங்கள் ஆகியன குறியீட்டுடன் இணைக்கப்படும். பயிா்களில் பூச்சி மற்றும் நோய்கள் குறித்த விவரங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிக்கப்படும். இந்தத் தகவல்கள் குறுஞ்செய்தி வழியாக விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தனி இணைய முகப்பு:

விவசாயிகள் தங்களது நிலங்களின் புல எண்களை அறிந்து கொள்ள வசதியாக, தமிழ் மண் வளம் என்ற தனி இணைய முகப்பு உருவாக்கப்படும். மேலும், மண் வளப் பரிந்துரை அட்டையை விவசாயிகளே அச்சிட்டுக் கொள்ள முடியும். இதன் மூலம், மண் வளத்துக்கேற்ற வேளாண், தோட்டக்கலை மற்றும் மரப் பயிா்கள் பரிந்துரை செய்யப்படும். தொலையுணா்தல் (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் மூலம் நில உடைமை, பருவம் வாரியாக பயிா்களின் சாகுபடிப் பரப்பு, வேளாண் சந்தை நுண்ணறிவுப் பிரிவு மூலம் விலை கணிக்கப்பட்டு விவசாயிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன்மூலம் விளை பொருள்களுக்கு ஏற்ற விலை கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com