சிறைகளில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்: பொன்மாணிக்கவேல்

அருங்காட்சியங்கள் உள்ளிட்டவைகளில் சிறைபட்டு இருக்கும் தெய்வத் திருமேனி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறினார்.
அவிநாசி அருகே பழங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சிவனடியார்கள் அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் காவல்துறை தலைவர் ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்.
அவிநாசி அருகே பழங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சிவனடியார்கள் அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் காவல்துறை தலைவர் ஏ.ஜி.பொன்மாணிக்கவேல்.

அவிநாசி: அருங்காட்சியங்கள் உள்ளிட்டவைகளில் சிறைபட்டு இருக்கும் தெய்வத் திருமேனி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறினார்.

உலக சிவனடியார்கள் அறக்கட்டளை மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா அவிநாசி அருகே பழங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை ஒட்டி, நால்வர் திருவீதி உலா கைலாய வாத்தியத்துடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளை பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் சரவண மாணிக்கவாசசுவாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். 

மாநில தலைமை ஆலோசகரும், முன்னாள் காவல்துறை தலைவருமான ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் பேசியதாவது: இறைவனிடத்தில் இருந்து விபூதியை வாங்குவது மட்டுமின்றி, மனதார சமயத் தலைவர்களை மதிக்க வேண்டும். 60 வயதைக் கடந்த பிறகு வரும் ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த வரம், அதை இறைவனுக்கே அர்பணிக்க வேண்டும். இறைவனின் திருமேனிகளை சிலைகள் என சொல்லக் கூடாது விக்ரகம் என சொல்ல வேண்டும். வழக்குகளை பொறுத்தவரை நடைபெற்றதை நடைபெறவில்லை எனவும், நடைபெறாததை நடைபெற்றதாகவும் கூறாலம் இறுதியில் இவை அனைத்தும் இறைவன் முன் தோற்றுப்போகும். 

கோயில் அலுவலர்கள் கால பூஜைகளிலெல்லாம் தலையிடக் கூடாது, முறைகேடு இல்லாமல் நிர்வாகித்துக் கொண்டால் போதுமானது. சென்னை மீயுசிம், கருவூலம், விக்ரக பாதுகாப்பகம் உள்ளிட்ட சிறைகளில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோயில்களுக்கு கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். 

கோயில்களில் உள்ள தெய்வத் திருமேனிகளை, விக்ரங்களை நன்கு பாதுகாக்க வேண்டிய பங்களிப்பு அடியார்கள் பெருமக்களுக்கு உண்டு. விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். 

தமிழ், பண்பாடு கலாச்சாரத்தை அடுத்த தலைமுறையினருக்காக பாதுகாக்க வேண்டும். அதற்காக குழந்தைகளுக்கு சூட்டுப்படும் பெயர்கள் முதற்கொண்டு பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும். அனைத்து அடியார்களும் உலக சிவனடியார்கள் கொடைக்குள் ஒருங்கிணைவது பாதுகாப்பானது என்றார் பொன்மாணிக்கவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com