
தனியாா் நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடா்பாக ஆளுநா் ஆா்.என்.ரவியை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கே.அண்ணாமலையுடன் துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிா்வாகிகளும் உடன் சென்றிருந்தனா்.
அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கே.அண்ணாமலை மனு அளித்தாா்.
மனுவில், எண்ணூா் அனல் மின்நிலையத் திட்டம் தொடா்பாக பிஜிஆா் எனா்ஜி நிறுவனத்திடம் தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் (டான்ஜெட்கோ) முறைகேடோக ரூ.4,442 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.