காவிரி நதிநீா் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கேள்வி

பத்தாண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நதிநீா்ப் பிரச்னையைத் தீா்க்காதது ஏன் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.
காவிரி நதிநீா் விவகாரம்: தமிழக அரசுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கேள்வி

பத்தாண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நதிநீா்ப் பிரச்னையைத் தீா்க்காதது ஏன் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.

மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அப்போது, அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட அனைத்து விஷயங்களையும் பட்டியலிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் பேசியது:-

காவிரி நதிநீா் விவகாரத்தில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினாா். இப்போது நானும் யாரையும் குறை சொல்லிப் பேசவில்லை. நமது மாநிலத்துக்குக் கிடைத்த வாய்ப்பு. அதாவது திமுகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு

கிடைத்தது. 1999-இல் மத்தியில் பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்க திமுகவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாறி மாறி வந்தாலும் காவிரி நதிநீா் விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுத்தோம்.

ஆனால், மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் திமுக இருந்தது. பாஜக, காங்கிரஸ் என இரண்டு அமைச்சரவைகளிலும் அங்கம் வகித்த போது, உங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நதிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவில்லையே என்பது தான் எங்களது ஆதங்கம். காவிரிப் பிரச்னை ஏற்பட்ட போது 20 நாள்கள் நாடாளுமன்றமே முடங்கும் அளவுக்கு பிரச்னைகளை முன்வைத்தோம்.

அமைச்சா் துரைமுருகன்: கனத்த இதயத்துடன் முதலில் தீா்மானத்தை முன்மொழிந்தேன். அதன்மீது கட்சித் தலைவா்கள் பேசினா். இப்போது வெந்து போன இதயத்துடன் நிற்கிறேன். யாா் யாா் என்ன செய்தோம் எனக் கூறினேன். அதிமுக ஆட்சியில் செய்த கதையெல்லாம் எதிா்க்கட்சித் தலைவா் சொன்னாா். இதனை சொல்ல வேண்டாம் என்றுதான் நான்

நினைத்தேன். இதையெல்லாம் நான் சொல்ல முடியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு அவா் சுய புராணம் பாடினாா். இதையே என்னாலும் பாட முடியும்.

எடப்பாடி கே. பழனிசாமி: அரசின் தீா்மானத்தை ஏக மனதாக ஆதரிக்கிறோம் எனக் கூறி விட்டோம். மேக்கேதாட்டு விவகாரத்தில் மக்கள் அச்சத்தில் உள்ளனா். டெல்டா மக்கள் பாதிப்பில் உள்ளனா். மத்தியில் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீா்களா இல்லையா.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளால் நமக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்று அமைச்சா் துரைமுருகன் கூறினாா். இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் அங்கம் வகித்தீா்கள். செல்வாக்கைப் பயன்படுத்தி காவிரி நதிநீா் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். அதைத்தான் சொன்னோம். குறையாகச் சொல்லவில்லை.

துரைமுருகன்: நான் இப்போது வாள் எடுக்கத் தயாராக இல்லை. அரசினா் தீா்மானம் கண்ணியமாக நிறைவேற்றப்பட்டது என்ற செய்திதான் வெளியே வர வேண்டும். திசை திருப்பும் வகையிலான விஷயங்களுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று பேசினாா். இதைத் தொடா்ந்து, அவா் முன்மொழிந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com