‘அம்மா கிளினிக் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது அதிமுகதான்’

அம்மா கிளினிக் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது அதிமுகதான் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்)
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்)

அம்மா கிளினிக் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது அதிமுகதான் என்று பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று காலை பேரவைக் கூடியது முதல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அம்மா கிளினிக் திட்டத்தை நிறுத்தியதால் பணியாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் அதிமுகவை சேர்ந்த பேரவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது:

“அம்மா கிளினிக் மருத்துவத் திட்டத்திற்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது அதிமுகதான். ஓராண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்தபோதும் 3 மாத காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டது.

மருத்துவத் துறையில் பணி நியமனம் செய்யும்போது, கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com