131கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்கள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு (2022-23) முதல் இளங்கலைப் படிப்புகளில் திருநங்கையர்களுக்கு
131கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இலவச கல்வி: சென்னை பல்கலைக்கழகம்


சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்கள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், வரும் கல்வியாண்டு (2022-23) முதல் இளங்கலைப் படிப்புகளில் திருநங்கையர்களுக்கு அனைத்து இணைப்புக் கல்லூரிகளிலும் இலவச கல்வி அளிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகம் கீழ் வரும் 131 இணைப்பு மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 340 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளித்து வரும் நிலையில், திருநங்கையர்களின் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும், திருநங்கையர்களுக்கு (மூன்றாம் பாலினத்தவர்) இலவசமாக கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, “ஒவ்வொரு கல்லூரியிலும் இளங்கலைப் படிப்புகளில் திருநங்கையர்ளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு இடத்தையாவது ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அதிகமான திருநங்கையர்கள் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதை உறுதிசெய்யலாம்” என்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.கௌரி கூறியுள்ளார். 

இதற்கு சிண்டிகேட் குழுவின் ஒப்புதலைப் பெற பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.  ஒப்புதல் தந்ததும் வரும் கல்வியாண்டில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படும். 

அதன்படி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு தலா ஒரு இடம் வழங்கப்படும்,

மேலும் "அடுத்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து திருநங்கையர்களுக்கான கல்விக் கட்டணத்தை பல்கலைக்கழகம் தள்ளுபடி செய்யும்” என்று கௌரி கூறியுள்ளார். 

லயோலா கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளில் ஒன்று அல்லது இரண்டு திருநங்கையர்களர்களுக்கு இலவச கல்வியை அளித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com