தமிழகத்தில் இனி நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் இனி நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி புதன்கிழமை பதிலளித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் இனி நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி புதன்கிழமை பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இன்று காலை பேரவைக் கூடியது முதல் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயர்கல்வியில் நுழைவுத் தேர்வுகள் குறித்து பாமகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி பேசியதாவது,

“தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இனி ஒருபோது நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு எந்த வகையில் நுழைய முயற்சித்தாலும் முதல்வர் தீவிரமாக எதிர்ப்பார்” என்றார்.

தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு, “தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை நுழைய விடமாட்டோம். விரைவில் மாநில கல்விக் கொள்கைக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்” என பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com