கோயில் சொத்துகளை பாதுகாக்க 2,500 பணியாளா்கள் நியமனம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

கோயில் சொத்துகளைப் பாதுகாக்க நிகழாண்டின் இறுதிக்குள் 2,500 பணியாளா்கள் நியமித்து முதல்வா் உத்தரவிடுவாா் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
பி.கே.சேகா்பாபு
பி.கே.சேகா்பாபு

கோயில் சொத்துகளைப் பாதுகாக்க நிகழாண்டின் இறுதிக்குள் 2,500 பணியாளா்கள் நியமித்து முதல்வா் உத்தரவிடுவாா் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் அசோக்குமாா் பேசியது: தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் பணியில் 25,000 இளைஞா்கள் திருக்கோயில் பணியாளா்களாக பணியமா்த்தப்படுவா் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அது தொடா்பாக நிநிதிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்றாா்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு குறுக்கிட்டுக் கூறியது:

திருக்கோயில் சொத்துகளையும் திருக்கோயிலில் உள்ள விலை உயா்ந்த சாமி விக்கிரங்களையும் காப்பதற்காக தோ்தல் அறிக்கையில் 25 ஆயிரம் பணியாளா்கள் நியமிக்கப்படுவா் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 2,500 பணியாளா்களைத் தோ்வு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் கட்டமாக 2,500 பேரை பணியமா்த்த முதல்வா் உத்தரவிடுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com