வங்கி வாயிலில் விவசாயிகள் நிற்காத நிலை ஏற்படும்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தற்போது நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம் விவசாயிகள்  கடன் கேட்டு வங்கியின் வாயிலில் நிற்காத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி வாயிலில் விவசாயிகள் நிற்காத நிலை ஏற்படும்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
வங்கி வாயிலில் விவசாயிகள் நிற்காத நிலை ஏற்படும்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்


சென்னை: தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் மூலமாக, அடுத்த 10 ஆண்டுகளில், விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிச்சயம் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதுபோல, தற்போது நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மூலம் விவசாயிகள்  கடன் கேட்டு வங்கியின் வாயிலில் நிற்காத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் பதிலளித்து உரையாற்றினார்.

அமைச்சர் பேசுகையில், வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததன் மூலமாக, பாமக இதுவரை நிழல்நிதிநிலை அறிக்கையாக வெளியிட்டு வந்த கனவை திமுக அரசு நனவாக்கியுள்ளது.

தமிழக அரசு அறிவித்த நல்ல திட்டங்கள் மூலமாக, தமிழகத்தில், கடந்த 10 மாதங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் கூடுதலாக குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் கரும்பு உற்பத்தி செய்யும் தொழில் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் மூன்று தொலைநோக்குத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை தொகுப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததால், 46 ஆண்டுகளில் எதிர்பாராத வகையில் விளைச்சல் அதிகமாக ஏற்பட்டு, குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுளள்து.
அதாவது, கடந்த 10 மாதங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் கூடுதலாக குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கரும்பு கூடுதலாக விளைவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தொலைநோக்குத் திட்டம்.

மூன்றாவது தொலைநோக்குத் திட்டமாக தேங்காய், பருத்தி, சூரிய காந்தி கரும்பு ஆகிய பயிர்களுக்கான வேளாண் உற்பத்தயில் முதல் மூன்று இடங்களுக்குள் தேசிய அளவில் தமிழகம் இடம் பிடிக்க வேண்டும் என்ற தொலை நோக்கு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த மூன்று தொலைநோக்குத் திட்டங்களும் இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். கரும்பு ஊக்கத் தொகை கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கூட்டிக் கொடுத்தார்கள். தற்போது இந்த ஆண்டு ஊக்கத்தொகை 195 ரூபாய் அதிகரித்திருக்கிறோம். இதன் மூலம் ரூ.2,950ஆக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டங்கள் மூலம், 2 ஆண்டுகளில் கரும்புத் தொழில் லாபமாக மாற்றப்படும். வேளாண் துறை தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com