தமிழகம் நோக்கி வரும் இலங்கை மக்கள்: கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் இலங்கையிலிருந்து மக்கள் வர வாய்ப்பு உள்ளதை அடுத்து,
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: இலங்கையில்  கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் இலங்கையிலிருந்து மக்கள் வர வாய்ப்பு உள்ளதை அடுத்து, தமிழக காவல்துறையின் உயரடுக்கு 'கியூ' பிரிவு காவல்துறை, தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து குழந்தைகள் உள்பட மொத்தம் 16 அகதிகள், இந்திய கடலோர காவல்படை மற்றும் தமிழ்நாடு கப்பல் காவல்துறையினரால் மீட்கப்பட்டு தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து வந்தவர்கள் அனைவரும் இலங்கையின் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் செய்தியாளர்களிடம் பேசியது: 

"இலங்கையிலிருந்து வந்தவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைத்து, முகாமிலேயே விசாரணை நடத்துமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது 1,00,000-க்கும் அதிகமான மக்கள் இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் வந்தனர் என்பது நினைவிருக்கலாம். அவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 107 அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

அதிக அகதிகள் வருகையை தடுக்க கடலோர கோட்டத்தில் தமிழக காவல்துறை மற்றும் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நெருக்கடி குறித்து ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசு சிறப்பு அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com