கொல்லங்கோடு பத்ரகாளி தேவஸ்தான தூக்கத் திருவிழா: குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார் ஆளுநர் ரவி  

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழாவை ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
கொல்லங்கோடு பத்ரகாளி தேவஸ்தான தூக்கத் திருவிழா: குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார் ஆளுநர் ரவி  

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழாவை ஆளுநர் ஆர்.என். ரவி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார்.
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயில், வெங்கஞ்சியில் தூக்க நோ்ச்சை நடைபெறும் கோயில் என 2 கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா இன்று தொடங்கியது. இதனை ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்வான நேர்ச்சை தூக்கம் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெறுகிறது. 4ஆம் நாள் காலை 8.30 மணிமுதல் தூக்க நோ்ச்சை குலுக்கல், காப்புக்கட்டு நடைபெறுகிறது. 
6ஆம் நாள் விழாவில் (மாா்ச் 31) இரவு 7 மணிக்கு நடைபெறும் பண்பாட்டு மாநாட்டை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தொடக்கிவைக்கிறாா். 9ஆம் நாள் மாலை 6 மணிக்கு வண்டியோட்டம் எனப்படும் தூக்கவில்லின் வெள்ளோட்டம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான நோ்ச்சை தூக்கம் விழா, 10ஆம் நாளான ஏப். 4இல் நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணா்த்தல், 4.30 மணிக்கு தூக்கக்காரா்களின் முட்டுக்குத்தி நமஸ்காரம் நடைபெறுகிறது. 
5 மணிக்கு அம்மன் பச்சைப்பந்தலில் எழுந்தருளுகிறாா். 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்கி நடைபெறுகிறது. தூக்க நோ்ச்சை நிறைவடைந்த பின்னா், வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவடையும். இவ்விழாவில் இம்மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com