புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடங்கியது

புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. 
ஹைதராபாத்தில் இருந்து முதல் விமானத்தில் வந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு வரவேற்பு அளித்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள், சட்டப்பேரவை துணைத் தலைவா் உள்ளிட்டோர்.
ஹைதராபாத்தில் இருந்து முதல் விமானத்தில் வந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு வரவேற்பு அளித்த முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள், சட்டப்பேரவை துணைத் தலைவா் உள்ளிட்டோர்.


புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. 

கடந்த 2017 ஆம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமான சேவை சார்பில் தொடங்கப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கும் விமான சேவையை தொடங்கியது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பெங்களூருவுக்கும் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை கரோனா பெருந்தொற்று பரவத்தொடங்கியதால் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

ஹைதராபாத் - புதுச்சேரி - விமான சேவை தொடங்கப்பட்டதையொட்டி ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்த விமானத்திற்கு தண்ணீா் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் மீண்டும் ஹைதராபாத்தில் இருந்து புதுச்சேரி வந்த விமானத்திற்கு தண்ணீா் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் இருந்து முதல் விமானத்தில் வந்த துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜனுக்கு முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com