பணத்தை அல்ல...தமிழர்களின் மனங்களைக் கொண்டுவந்துள்ளேன்: அபுதாபியில் மு.க.ஸ்டாலின் உரை

துபைக்கு நான் பணத்தைக் கொண்டுவரவில்லை, மக்களின் மனங்களையே கொண்டுவந்துள்ளேன் என்று அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பணத்தை அல்ல...தமிழர்களின் மனங்களைக் கொண்டுவந்துள்ளேன்: அபுதாபியில் மு.க.ஸ்டாலின் உரை

துபைக்கு நான் பணத்தைக் கொண்டுவரவில்லை, மக்களின் மனங்களையே கொண்டுவந்துள்ளேன் என்று அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அபுதாபியில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற 'நம்மில் ஒருவர்' நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு துபை வாழ் தமிழக மக்களிடையே உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், நான் துபைக்கு பணத்தை எடுத்து வந்துள்ளதாக சிலர் எனது இந்த பயணம் குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். நான் பணத்தை கொண்டுவரவில்லை. மாறாக மக்களின் மனதை கொண்டுவந்துள்ளேன்.

படிக்கதினமணி இணையதள செய்தி எதிரொலி: முதியவரின் மோட்டார் சைக்கிளை பழுது நீக்கிய மேட்டூர் மதுவிலக்கு ஆய்வாளர்
 
எனது இந்த ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் வெற்றியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டு பயணத்தை திசைதிருப்ப வேண்டும் என்று சிலர் தவறான பிரசாரத்தை பரப்பி வருகின்றனர். 

தமிழகத்தை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் பயணமாக எனது பயணம் அமைந்துள்ளது. 4 நாள்களிலேயே துபை பயணத்தை முடித்துவிட்டோமே, இன்னும் நான்கு நாள்கள் இருக்கக் கூடாதா என்ற ஏக்கம் மனதில் உள்ளது.

ஒருபுறம் கடந்தகால பெருமிதம், மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படுகிறேன். தமிழ்நாட்டை தேற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

துபையின் புர்ஜ் கலீபா கட்டடத்தில் செம்மொழித் தமிழ் ஒளிர்ந்தது பெருமை அளிக்கிறது. பேச்சைக் குறைத்து செயலில் நமது திறமையை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறேன்.

செய் அல்லது செத்துமடி என்பார்கள். ஆனால் செய்து முடித்து செய்த்துமடி என்பது தான் புதுமொழி. அதைத்தான் பின்பற்றுகிறேன் என்று கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com