தனியார் பள்ளிகளுக்கு கல்வி அதிகாரி எச்சரிக்கை

மாணவர்களை அழைத்து வரும் தனியார் பள்ளிகள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
தனியார் பள்ளிகளுக்கு கல்வி அதிகாரி எச்சரிக்கை


மாணவர்களை அழைத்து வரும் தனியார் பள்ளிகள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது தொடா்பான வழக்கில் 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று, ஆசிரியா்கள், ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். சென்னையின் தென் மாவட்டக் கல்வி அலுவலா் சுரேந்தா் பாபுவும் பல மணி நேரம் விசாரணை செய்தாா்.

விபத்து தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்துகின்றனர். 

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். 

அந்த சுற்றறிக்கையில், 

* பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து ஆண்டுதோறும் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் பரிசோதனைக்கு உள்படுத்தி வாகனங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

* ஆண்டுதோறும் முறையாக புதுப்பிக்கப்படாத பள்ளி பேருந்துகளை இயக்க கூடாது. 

* ஓட்டுநர் நியமனம் செய்யும் போது உரிய கல்வி தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

* மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப அழைத்து சென்று விட பயன்படுத்தப்படும் பள்ளி வாகனங்கள், ஆட்டோ ரிக்‍ஷா ஆகியவற்றில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகள் மாணவர்களை அழைத்தும் வரும் பள்ளி வாகனத்தில் கண்டிப்பாக உதவியாளர் இருக்க வேண்டும்.

* வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

* அதிகயளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது.

* பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது  என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com