பெட்ரோல் விலை ரூ.106-ஐ நெருங்கியது

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகளும் இன்று அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகளும் இன்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.94-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான்கரை மாத இடைவெளிக்குப் பிறகு, கடந்த மாா்ச் 22 முதல் பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் தொடா்ச்சியாக, அவற்றின் விலை செவ்வாய்க்கிழமை 7-ஆவது முறையாக அதிகரிக்கப்பட்டதுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூா் வரிக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாறுபடும்.

இதனிடையே பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இன்று  இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com