
சத்தியமங்கலத்தில் தொழிலாளர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை
மே நாளையொட்டி சத்தியமங்கலத்தில் உழைக்கும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
சத்தியமங்கலம் எஸ்ஆர்டி கார்னரில் சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பி ஜெயபாலன், முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிலாளர்கள் விபத்து, நோய் மற்றும் அவசர கால சிகிச்சைக்கு இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம்.
எஸ்ஆர்டி கார்னரில் இருந்து புறப்பட்ட இரு சக்கர தலைக்கவசம் பேரணி.
அதனைத் தொடர்ந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
எஸ்ஆர்டி கார்னரில் இருந்து புறப்பட்ட இரு சக்கர தலைக்கவசம் பேரணி மைசூர் ரோடு, புதிய பாலம், கடைவீதி வழியாக கோட்டுவீராம்பாளையம் சென்றடைந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்று தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையும் படிக்க | நிலக்கரி பற்றாக்குறை: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்