சென்னையில் சாலைக்கு நடிகர் விவேக் பெயர்!

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு "விவேக்" சாலை என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். 
சென்னையில் சாலைக்கு நடிகர் விவேக் பெயர்!

மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு "விவேக்" சாலை என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். 

ஆழ்வார்திருநகரில் ஆயிரம் குடும்பங்களுக்கு ரமலான் பிரிசு வழங்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கம் தொகுதி பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு ரமலான் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். 

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கருணாநிதி காலம் முதலே திமுக அரசு பெண்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி அரசுக்கு இழப்பு. இருப்பினும், இலவச பேருந்து பயணம் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது. 
 
பசுமைக் காதலனான நடிகா் விவேக் மரம் நடுதலை தன் வாழ்நாளில் மிகப்பெரிய பணியாகவும் மரங்களின் மீது அன்பு கொண்டவராகவும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகராக விளங்கியவர். சுமாா் ஒரு கோடிக்கும் அதிக மரங்களை அவா் நட்டதோடு அவற்றை பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்தவா்.

அந்த நடிகரின் குடும்பத்தினர் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு "விவேக்" சாலை என அவரது பெயரை சூட்ட வேண்டும் என முதல்வரை சந்தித்து மனு அளித்தனர். 

இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்டுவதற்கு அரசாணை வெளியிட உத்தரவிட்டார். 

வரும் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என சுப்பிரமணியன் கூறினார். 

கடந்த 25 ஆம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி சந்தித்து மறைந்த நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்கிற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார். உடன் விவேக்கின் மகள் அமிர்தாநந்தினி, விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com