
தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் பலியான தாயும் நிறைமாத கர்ப்பிணியும்
தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவில் குடியிருந்து வந்த முத்துராமன் என்பவர் மாநகராட்சி கழிப்பறையில் பணியாற்றி வருகின்றார்.
இதையும் படிக்க.. நாளை தொடங்குகிறது அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம்
இவரது மனைவி காளியம்மாள்(47) இந்த தம்பதியினரின் ஒரே மகளான கார்த்திகா(21) இவருக்கு திருமணமாகி 9-மாத கர்ப்பிணியாக இருக்கின்றார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இரவு தூங்கி கொண்டிருந்தபோது தாங்கள் வசித்து வந்த பழமையான வீடு இடிந்து விழுந்ததில் தாய் காளியம்மாள் மற்றும் மகள் கார்த்திகா ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். கணவர் முத்துராமன் காயத்துடன் உயிர் தப்பினார்.
சம்பவம் அறிந்து விரைந்து வந்த தென்பாகம் காவல்துறையினர் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் படுகாயம் அடைந்த முத்துராமனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்ததில் நிறைமாத கர்ப்பிணி மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.