மேட்டூர் அனல் மின் நிலைய 2வது கொதிகலன் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலைய 2வது கொதிகலன் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் அனல் மின் நிலைய 2வது கொதிகலன் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் கொண்ட நான்கு அலகும்   இரண்டாம் பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளன.

நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2,  3 மற்றும் 4-வது அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒன்றாவது அலகு மட்டும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரண்டாவது அலகில் கொதிகலன் குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

முதல் பிரிவில் நேற்று காலை நான்காவது அலகு இயக்கப்பட்டது. ஒன்று மட்டும் நான்காவது அலகில் தலா 175 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

 நேற்று முன்தினம் 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில் நேற்று சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால் கையிருப்பு நிலக்கரியின் அளவு 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com