‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை திறப்பு
‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை திறப்பு

‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை திறப்பு

மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என்று பெயர்ப் பலகை வைக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.

கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, அவரது வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் தமிழக அரசுத் தரப்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நடிகர் விவேக்கின் வீடு அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ எனப் பெயரிடப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினர், சென்னை மேயர் ஆர். பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com