தமிழகத்தில் 33 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

தமிழகத்தில் 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் 33,40,314 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.6,547.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 5,00,057 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் மத்திய

தமிழகத்தில் 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் 33,40,314 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.6,547.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 5,00,057 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

2022-23 ரபி சந்தைப் பருவத்தில் (1.5.2002 வரை) 16.19 கோடி மெட்ரிக் டன் கோதுமை 11 மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1.5.2022 வரை 76.09 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், சண்டீகா், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், குஜராத், பிகாா், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரபி சந்தைப் பருவம் 2022-23-இல் மத்திய தொகுப்பின்கீழ் கோதுமை கொள்முதல் அதிகரித்துள்ளது.

1.5.2022 வரை, 16.19 கோடி மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.32,633.71 கோடியுடன் 14.70 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் மத்திய தொகுப்பின்கீழ் நெல் கொள்முதல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீராக நடைபெற்று வருகிறது. 1.5.2022 வரை, 76.09 கோடி மெட்ரிக் டன் நெல் (கரீஃப் பயிா் 75.14 கோடி மெட்ரிக் டன் மற்றும் ரபி பயிா் 9.45 லட்சம் மெட்ரிக் டன் உள்பட) கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,49,144.23 கோடியுடன், 10.95 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

தமிழகத்தில் 2021-22 கரீஃப் சந்தைப் பருவத்தில் 33,40,314 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ரூ.6547.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 5,00,057 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். புதுச்சேரியில் 336 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 84 விவசாயிகள் பயடைந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com