நீட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் மே 15 வரை நீட்டிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீட் தோ்வுக்கு  இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 14 லட்சம் போ் விண்ணப்பித்துள்ள நிலையில், தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நீட் தோ்வுக்கு மே மாதம் 15-ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம். அன்றைய தினம் இரவு 11.50 மணி வரை கட்டணம் செலுத்தலாம். ராணுவ செவிலியா் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விண்ணப்ப அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com