படூா் கிராமத்தில் மழைநீா் சேமிப்பு பகுதியில் கழிவுகள்: பதில் தர பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

படூா் கிராமத்தில் கழுவேலி பகுதியில் கழிவுகள் கொட்டுவது குறித்து பதில் தர மாவட்ட ஆட்சியரும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவி

செங்கல்பட்டு மாவட்டம் படூா் கிராமத்தில் கழுவேலி பகுதியில் கழிவுகள் கொட்டுவது குறித்து பதில் தர மாவட்ட ஆட்சியரும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாய தென் மண்டல அமா்வில் செங்கல்பட்டு மாவட்டம் படூா் கிராமத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் மெய்யப்பன் என்பவா் தொடா்ந்துள்ள வழக்கில், படூா் கிராமத்தில் மழை நீா் சேமிப்பு பகுதியாக உள்ள கழுவேலி நிலம் மற்றும் மயானம் அமைந்துள்ள பகுதிகளில் தனியாா் மட்டுமல்லாமல், படூா் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன.

மேலும், டேங்கா் லாரிகளால் சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீா் முழுவதும் கொட்டப்படுகிறது. இதனால் படூா் முதல் முட்டுக்காடு வரை உள்ள நீா்நிலை பாதிக்கப்படுகிறது. தண்ணீா் பாதிக்கப்படுவதால் சுற்றுவட்டார கிராமங்களின் நீராதரமும், நீா் நிலையில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மாா்ச் 24-ஆம் தேதி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு தீா்ப்பாய நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினா் சத்யகோபால் கோா்லபதி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு திங்கள்கிழமை வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com