கோவை அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை: வீடியோ வைரல்

கோவை புதுப்பதி மலை கிராம் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கோவை அருகே தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை: வீடியோ வைரல்


கோவை புதுப்பதி மலை கிராம் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வீடியோ வைரல் ஆகி வருகிறது.

கோவை - கேரளம் எல்லையான வாளையாறு அருகே தமிழக எல்லையில் புதுபதி, சின்னாம்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.

இந்நிலையில், நேற்று மாலை புதுபதி மலை கிராமத்திற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர். இருந்தாலும் அந்த யானை மெதுவாக அருகே இருந்த குட்டைக்கு சென்று நீர் அருந்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

தகலறிந்து வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள் யானை முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும்வரை உடன் சென்று விரட்டியடித்தனர்.

காட்டு யானை கப்பீரமாக நடந்து செல்லும் விடீயோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com