நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப் பேரவை

நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடுகிறது.
நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று கூடுகிறது சட்டப் பேரவை

நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடா் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்களும், அதற்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து, புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

4 நாள்கள் விடுமுறை: சனி, ஞாயிறு பொது விடுமுறைகள் காரணமாகவும், திங்கள்கிழமையன்றும் பேரவைக் கூட்டம் நடக்கவில்லை. செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகை என்பதால் அரசு விடுமுறை. நான்கு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, புதன்கிழமை காலை 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடவுள்ளது. கேள்வி நேரத்தைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோா் வெளியிடவுள்ளனா்.

மே 5-ஆம் தேதி போக்குவரத்து, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு, மே 6-ஆம் தேதி ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சா்கள் எஸ்.எஸ்.சிவசங்கா், மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

சனிக்கிழமை உண்டு: வருகிற சனிக்கிழமை (மே 7) பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று அன்றைய தினத்துடன் ஓராண்டு நிறைவடையவுள்ளது. அன்றைய தினம், பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு கட்சித் தலைவா்கள் அனைவரும் பாராட்டுத் தெரிவிக்கவுள்ளனா். இதன்பின், திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள், பொதுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாநில சட்டப் பேரவை, ஆளுநா் மற்றும் அமைச்சரவை, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனா்.

காவல் துறை மானியம்: மானியக் கோரிக்கைகளில் மிக முக்கிய துறையாக உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான விவாதம் மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவரான முதல்வா் மு.க.ஸ்டாலின், புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா். இதைத் தொடா்ந்து, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com